Skip to main content

Posts

"தமிழ் தாத்தா" தமிழைக் காத்த தமிழறிஞர் (உ.வே.சா) வாழ்க்கை வரலாறு

  உ. வே. சாமிநாதையர் வாழ்க்கை வரலாற்று நிகழ்வுகள்  உ .வே. சா. பிறப்பு : 19 - 02 - 1885 உ. வே. சா. இறப்பு : 28 - 04 - 1942 உ. வே. சா. ஆசிரியர் : மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை  உ.வே.சா. சிறப்பு பெயர் : தமிழ் தாத்தா, கும்பமுனி. உ. வே. சா. இயற்பெயர் : சாமிநாதன்   உ .வே. சா. பிறந்த ஊர் : உத்தமதானபுரம் (திருவாரூர் மாவட்டம்) உ. வே. சா -  உத்தமதானபுரம் வேங்கடசுப்பையர் சாமிநாதன்  உ. வே. சாமிநாத ஐயர் வாழ்க்கை குறிப்பு: சாமிநாதன் பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி 1855ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டத்திலுள்ள  வலங்கைமான் வட்டம் (உத்தமதானபுரம்) எனும் சிற்றூரில் வேங்கட சுப்பையர் மற்றும் சரசுவதி அம்மாள் தம்பதிக்கு மகனாக பிறந்தார். இவரின் தந்தை இசையுடன் ஹரிதா கலாட்சேபம் செய்பவர். உ.வே.சா. தமது தொடக்க தமிழ் கல்வியையும், இசை கல்வியையும் சொந்த ஊரில் உள்ள ஆசிரியர்களிடம் கற்றறிந்தார். பின்னர் தன் 17 ஆம் வயதில் நாகப்பட்டினம் மாவட்டம் திருவாவடுதுறை (சைவ ஆதீனத்தில்) தமிழ் கற்பித்துக் கொண்டிருந்த புகழ்பெற்ற மகாவித்துவான் என அழைக்கப்பட்ட தமிழறிஞர் திருச்சிராப்பள்ளி மீ...

”கால மொழி ஆராய்ச்சியாளர்” எஸ்.வையாபுரிப்பிள்ளை வாழ்க்கை வரலாறு....

  எஸ். வையாபுரிப்பிள்ளை வாழ்ந்த காலம் : 12 -10 -1891 முதல் 17- 02- 1956 வரை வாழ்ந்தார். பிறந்த ஊர்: திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சிக்கநரசய்யன்பேட்டை. பெற்றோர் பெயர்கள் : சரவண பெருமாள் மற்றும் பாப்பம்மாள். சிறப்புப் பெயர்: கால மொழி ஆராய்ச்சியாளர். எஸ். வையாபுரிப்பிள்ளை கல்வி பருவம்: * வையாபுரிப்பிள்ளை பாளையங்கோட்டை புனித சவேரியார் பள்ளியிலும், திருநெல்வேலி ம.தி.தா இந்துக் கல்லூரியிலும் பிறகு சென்னை கிறிஸ்துவக் கல்லூரியிலும் படித்துப் பட்டம் பெற்றார். * அந்த ஆண்டு சென்னை மாகாணத்திலேயே தமிழில் மிக அதிக மதிப்பெண் பெற்று சேதுபதி தங்க மெடல் (பதக்கம்) பெற்ற பெருமைக்கு உரியவர் ஆனார். எஸ்.வையாபுரிப்பிள்ளை வாழ்க்கை குறிப்புகள்: * இருபதாம் நூற்றாண்டின் முதன்மை தமிழ் ஆராய்ச்சியாளர்களில் ஒருவர். * தமிழ் நூற்பதிப்பு துறையில் சிறந்த பதிப்பாசிரியராக விளங்கியவர். * தமிழில் சிறந்த புலமை உள்ளவர். * ஆய்வுக் கட்டுரையாளர், திறனாய்வாளர், கால மொழி ஆராய்ச்சியாளர், மொழிபெயர்ப்பாளர், சொற்பொழிவாளர், கதை, கவிதைகள் புனையும் திறன் படைத்தவர் எனப் பன்முகப் பரிமாணங்களைக் கொண்டவர். * சென்னை பல்கலைக்கழகம் வெளிய...

"தமிழ் தென்றல்" திரு. வி .கல்யாணசுந்தரனார் வாழ்க்கை வரலாற்று குறிப்புகள்.....

  திருவாரூர் விருத்தாசலம் கலியாணசுந்தரனார் வாழ்க்கை வரலாற்றில் நடந்த முக்கியமான நிகழ்வுகள் இங்கே விரிவாக காணலாம். திரு.வி. க வாழ்ந்த காலம்: 26 - 08 -1883 முதல் 17 - 09 - 1953 வரை வாழ்ந்தார். திரு.வி.க. பிறந்த ஊர்: காஞ்சிபுரம் மாவட்டம் , துள்ளம் (தண்டலம்). திரு.வி.க. பெற்றோர் பெயர்: விருத்தாசல முதலியார் மற்றும் சின்னம்மா. திரு.வி.க வாழ்க்கை வரலாற்று குறிப்புகள்: 1. காஞ்சிபுரம் மாவட்டத்தில் துள்ளம் என்னும் சிற்றூரில் விருத்தாசல முதலியார் சின்னம்மா தம்பதிகளுக்கு ஆறாவது மகனாகப் பிறந்தார் திரு.வி. கல்யாண சுந்தரனார். 2. கல்யாண சுந்தரனாரின் தந்தை இலக்கியப் பயிற்சியும், இசைப் பயிற்சியும் உடையவராகத் திகழ்ந்தார். 3. ஆசிரியத் தொழிலுடன் வணிகமும் புரிந்தவர் கல்யாண சுந்தரனாரின் தந்தை. 4. இவர் தந்தை ஆசிரியராக திருவாரூரில் பணி செய்தபோது கல்யாண சுந்தரமும் அங்கேயே வளர்ந்தார். 5. இவர் (திரு. வி. க வின் தந்தை) பச்சையம்மாள் என்பவரை மணந்து மூன்று ஆண்களையும், ஒரு பெண் குழந்தையையும் பெற்றார். 6. இவ்வம்மையார் இறந்த பின்னர் சின்னம்மாள் என்பாரை மணந்து நான்கு ஆண் மக்களையும், நான்கு பெண் மக்களையும் ப...

"சொல்லின் செல்வர்" - ரா.பி.சேதுப்பிள்ளை வாழ்க்கை வரலாற்று குறிப்புகள்...........

  ரா. பி. சேதுப்பிள்ளை வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகள்: 1. வாழ்ந்த காலம்: (02 - 03 -1896 முதல் 25 -04- 1961) 2. பிறந்த ஊர் : தமிழ் நாட்டில் உள்ள திருநெல்வேலி மாவட்டத்தில்                இராசவல்லிபுரம் என்னும் ஊரில் பிறவிப் பெருமாள் பிள்ளை மற்றும் சொர்ணம்மாள் ஆகியோருக்கு மகனாக பிறந்தவர் தான் ரா.பி.சேதுப்பிள்ளை ஆவார். 3. இயற்பெயர் : சேது (ரா.பி. சேதுப்பிள்ளை யின் முன் எழுத்துகளாக அமைந்த "இரா" என்பது இராசவல்லிபுரதையும்   "பி" என்பது பிறவி பெருமாள் பிள்ளை அவர்களையும் குறிப்பிடுகின்றது. 4. கார்காத்த வேளாளர் குலத்தில் சேது பிறந்தார். 5. இவர் தந்தையார் சேதுகடலாடி ராமேஸ்வரத்தில் உள்ள இறைவனை பூசித்ததனால் பிறந்த தம் மகனுக்கு சேது என பெயர் சூட்டினார். ரா.பி. சேதுப்பிள்ளை பற்றிய முக்கிய குறிப்புகள்: * ரா.பி.சேதுப்பிள்ளை ஒரு தமிழறிஞர், எழுத்தாளர், வழக்கறிஞர், மேடைப் பேச்சாளர். * இவர் தமிழில் சொற்பொழிவு  ஆற்றுவதிலும், உரைநடை எழுதுவதிலும் மிகவும் பெயர் பெற்றவர். * இனிய உரைச் செய்யுள் எனக் குறிப்பிடும் அளவுக்கு அவரது உரைநடை இனிமை வாய்ந்தது எ...

நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் வாழ்க்கை வரலாறு....

  ந.மு. வேங்கடசாமி நாட்டார் வாழ்க்கை வரலாறு பற்றிய முழுமையான தகவல்கள் இங்கே காணலாம்  1. நடுக்காவேரி முத்துச்சாமி வேங்கடசாமி நாட்டார் ஏப்ரல் மாதம் 1884 ஆம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவையாறு வட்டத்தில் உள்ள நடுக்காவேரி என்ற ஊரில் முத்துசாமி நாட்டார்  மற்றும்   தையலம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தவர்தான் ந.மு.வேங்கடசாமி நாட்டார். 2. சிவப்பிரகாசம் என இவருக்கு முதலில் பெயரிடப்பட்டது. மேலும் இளம் வயதில் இவருக்குத் தொடையின் மேற்புறத்தில் ஒரு கட்டி உண்டாகி வருத்தியது அது ஆறினால் முடி எடுப்பதாக வேங்கடப் பெருமானை இவர்தம் பெற்றோர் வேண்டிக்கொண்டனர் அவ்வாறு நடந்துவிட இவர் பெயரை வேங்கடசாமி என அவர் பெற்றோர் மாற்றினார். 3. (19)பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், இருபதாம் நூற்றாண்டின்(20) முற்பகுதியிலும் வாழ்ந்த தமிழறிஞர் என்ற பெருமைக்கு உரியவர் மற்றும் சிறந்த சொற்பொழிவாளர், ஆராய்ச்சியாளராகவும் திகழ்ந்தவர். 4. இவர் நினைவாக தஞ்சாவூரில் 1992ஆம் ஆண்டு நாவலர் ந. மு. வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரி நிறுவப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ந. மு. வேங்கடசாமி நாட்டாரி...

பரிதிமாற்கலைஞர் - தமிழ் மொழியின் வரலாறு பற்றிய முக்கிய தகவல்கள்....

  பரிதிமாற் கலைஞர் ( 06-07-1870 முதல் 02- 11-1903 வரை வாழ்ந்தார்).   1. பரிதிமாற்கலைஞர் எனப்படும் வீ.கோ. சூரியநாராயண சாஸ்திரியார் ஒரு தமிழறிஞரும், நூலாசிரியரும், தனித்தமிழ் இயக்கத்தில் முதன்மையான பங்கு வகித்தவர்கள் ஒருவரும் ஆவார். இவர் உயரிய செந்தமிழ் நடையில் பேசுவதிலும், எழுதுவதிலும் வல்லவராக திகழ்ந்தார். 2. சூரிய நாராயண சாஸ்திரி என்னும் தம் பெயரைப் பரிதிமாற்கலைஞர் என தனித்தமிழ் ஆக்கிக் கொண்டவர் . 3. இவர் மதுரையை அடுத்த விளாச்சேரியில் பிறந்தார். பரிதிமாற் கலைஞர் பெற்றோர் பெயர்: தந்தை கோவிந்த சிவன் மற்றும் தாயார் லட்சுமி அம்மாவுக்கு மூன்றாவது மகனாக 1870 ஆம் ஆண்டு ஜூலை மாதம் திங்கள் ஆறாம் தேதி பிறந்தார். கல்வி: 1. வடமொழியை தந்தை யாரிடமும், தமிழை மதுரை சபாபதி முதலியார் இடமும் கற்றறிந்தார். 2. இளவயது முதலே தமிழ் மொழியின் மீதும், இலக்கணத்தின் மீதும், இலக்கியத்தின் மீதும் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த அவர் பின்னாளில் இளங்கலை பட்டப்படிப்பில் தமிழ் மொழியிலும் மற்றும் மெய்யியலிலும்  மாநிலத்திலேயே முதலாவதாக தேறினார். 3. தமிழ் மொழியின் வரலாறு மற்றும் நாடகவியல் உட்பட பல நூல்களை ...

மறைமலை அடிகள் - தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை பற்றிய முழுமையான விவரங்கள்.....

தூயதமிழ் தந்தை - மறைமலை அடிகள் வாழ்க்கை வரலாறு முக்கிய குறிப்புகள்.....   மறைமலை அடிகள் இயற்பெயர் : வேதாசலம். மறைமலை அடிகள் பிறந்த ஊர்:   திருக்கழுக்குன்றம். மறைமலை அடிகள் பெற்றோர் பெயர் : சொக்கநாத பிள்ளை மற்றும் சின்னம்மையார். மறைமலை அடிகள் மகள் பெயர் : T. நீலாம்பிகை. 1. மறைமலை அடிகளாரின்  இயற்பெயர் வேதாச்சலம் என பெயரிட காரணம்: பல ஆண்டுகளாக பிள்ளைப்பேறு இல்லாமல் இருந்து திருக்கழுக்குன்றம் சிவன் வேதாசலரையும், அம்மை சொக்கம்மையாரையும்  வேண்டி நோன்பிருந்து பிள்ளை பேறு பெற்றதால் தம் பிள்ளைக்கு வேதாசலம் என பெயரிட்டார்.  * அதன் பின்னர் தனித்தமிழ் பற்று காரணமாக 1916ஆம் ஆண்டு தம் பெயரை மறைமலை (வேதம் - மறை ) மற்றும் (அசலம் - மலை) என்று மாற்றிக் கொண்டார். * மறைமலை அடிகள் ஜூலை மாதம் 15ஆம் தேதி 1876 ஆம் ஆண்டு முதல் செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி 1950ஆம் ஆண்டு வரை தன் வாழ்க்கை பயணத்தை தொடர்ந்தார். மறைமலை அடிகள் ஒரு புகழ் பெற்ற தமிழ் அறிஞர் ஆவார். 2. மறைமலை அடிகள் பற்றிய முக்கிய குறிப்புகள்: * தமிழ் ஆய்வாளர் தமிழையும், வடமொழியையும், ஆங்கிலத்தையும் நன்கு கற்றவர். * உ...